52 பேர் காணமல் ஆக்கப்பட்டதை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1017ஆவது நாளாக வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் 52 தமிழர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பில் எதுவித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், 35 வருடங்கள் கடந்த நிலையில் 52 பேருக்கும் நடந்தது என்ன?, மாற்று தலைமை என்போரே தமிழர் பிரச்சனைக்கு ஏன் இந்தியாவை அழைக்கவில்லை, சர்வதேசமே நீதியை நிலைநாட்டு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

Latest Offers

loading...