எல்ல பகுதியில் இடம்பெற்ற வான் விபத்து: 9 பேர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஊவா மாகாணம் - எல்ல, வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.