வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கோடீஸ்வரன் எம்.பி விஜயம்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை - காரைதீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற கோடீஸ்வரன் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ஜெயசிறிலுக்கு தொடர்பினை மேற்கொண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.பிரகாஷ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடை மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.