அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற நபருக்கு அபராதம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற நபர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக ஒருவரை கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நீதிமன்ற நீதவான் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.