வெள்ள நிவாரண விநியோகம் தொடர்பாக பொது மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!

Report Print Mubarak in சமூகம்

நாட்டில் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிவாயல்கள் மூலமும், பல தனவந்தர்கள் மூலமும் சமைத்த உணவுகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிவாரண உதவிகளை மேற்கொண்டு வரும் அனைவரும் மேற்படி நிவாரண உதவிகளை ஒரு முகப்படுத்துமுகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா, நகர சபை, பிரதேச செயலகம் மற்றும் அனைத்து பள்ளிவாயல்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களை உள்ளிடக்கியதாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவினால் நிவாரணப் பொருடகளை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள், தனவந்தர்கள் தங்களால் முடியுமான உதவிகளை வாரி வழங்குமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களது உதவிகளை பணமாகவோ அல்லது பொருளாகவோ நாளை முதல் சம்மேளன காரியாலயத்தில் ஒப்படைத்து பற்றுசீட்டினைப் பெற்றுக்கொள்ளமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சம்மேளன வங்கி கணக்கு இல: 2960241 இலங்கை வங்கி, காத்தான்குடி தொடர்புகளுக்கு: 0777 801382, 077 3119146, 0777 673025