பொதுத் தேர்தலில் புதிய கட்சியின் ஊடாக களமிறங்கும் சஜித்!

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான குழுவினரால் புதிய கட்சியை ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் சஜித்திற்கு வழங்கப்படவில்லை என்றால் புதிய கட்சியில் போட்டியிடுவதற்காக இந்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கட்சியின் தலைமைப் பதவி யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போதும் கட்சிக்குள் நீடித்த மோதல்கள் காரணமாக சஜித் பிரேமதாஸவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொதுத் தேர்தலின் போதும் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க தயாரில்லை என சஜித் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் நெருக்கடியை பேசித் தீர்ப்பதற்கு சஜித் பிரேமதாஸவுக்கு, கட்சியின் சமகால தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அதனை சஜித் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.