கர்ப்பிணிப்பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Banu in சமூகம்

வெப்பநிலை மாற்றத்தால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கர்ப்பிணி பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து புவி வெப்பமடைதல் காரணமாக குறைப்பிரசவங்கள் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸாக உயரும்போது, ​​குறைப்பிரசவங்கள் 5 சதவீதம்வரையில் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாகவும் கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் 25,000 குறைப்பிரசவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இக் குறைப்பிரசவங்கள், பிரசவத்திற்கு இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு இடையில் ஏற்பட வாய்ப்பு அதிகமாகவுள்ளது என்றும் இது தொடர்பில் கர்பிணிப்பெண்கள் அவதானமாக இருக்குமாறும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.