சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் வெளிநாடு செல்லத் தடை?

Report Print Kamel Kamel in சமூகம்

அண்மையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டே நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு குறித்த பெண் பணியாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பெண் பணியாளர் வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் தடை விதித்துள்ளார்.