பதவி ஆசை எமக்கு இல்லை! சஜித்தை தலைவர் ஆக்கவும்

Report Print Varun in சமூகம்

ஐக்கிய தேசிய கட்சி மீது தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் காலதாமதமின்றி கட்சி சிறந்த ஒரு முடிவினை எடுக்கும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்தார்.

தாம் எந்தவித பதவி மோகத்தில் சஜித் பிரேமதாசாவை தலைமை பதவிக்கு கொண்டுவர நினைக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது உள்ள பற்றின் காரணமாக இந்த முயற்சியில் ஈடுபடுவதாகவும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

இதன்பொது மேலும் கருத்து தெரிவித்த அவர்:

கட்சிக்குள் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களுக்கு கட்சியின் தொகுதி அங்கத்துவம் கூட கிடையாது. அவ்வாறானவர்கள் கட்சி பற்றி கதைப்பது குறித்து நாம் கவலைப்படவில்லை.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சஜித் பிரேமதாச உள்ளிட்ட நாம் அனைவரும் நேற்றும் கூட கலந்தாலோசித்தோம் .

சஜித் பிரேமதாச கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகவே நாம் பாடுபடுகிறோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மக்களால் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்று தகுந்த முடிவை எடுக்கவும் என்பதே ஆகும்.