வவுனியாவில் 90 கட்டாக்காலி மாடுகள் மடக்கிப்பிடிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 90இற்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டானிச்சூர், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணி வரை 90 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் நிலையத்திலிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600 ரூபாய், தண்டம் 1000 ரூபாய், ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபாய் ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300 ரூபாய் விதிக்கப்படுமெனவும் நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.