வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் அங்கஜன் எம்.பி

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, கட்டைக்காடு பகுதியில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், உடனடி உதவிகளை வழங்குமாறு பணித்துள்ளார்.

கனமழையினால் கட்டைக்காடு பெரியகுளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளத்தை அண்டியப் பகுதியில் குடியிருந்த மக்களுடைய வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதனால் கண்டாவளை பிரதேச செயலக அதிகாரிகளினால், பாதிக்கப்பட்ட இரு குடும்பங்கள் இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கட்டைக்காடு அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான வெள்ள பாதிப்பு இனிமேல் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூறியுள்ளதுடன், தனது பங்களிப்பையும் வழங்க உறுதியளித்துள்ளார்.