இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு! மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு குளங்கள் அடைவு மட்டத்தை அடைந்துள்ளதுடன், நீர்ப்பாசன குளங்கள் சில வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று பகல் 26 அடியாக உயர்ந்துள்ளது.

36 அடி கொண்ட குறித்த குளத்திற்கு நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அக்கராயன் குளம் (25 அடி) 17.6 அடியாகவும், கரியாலை நாகபடுவான்குளம் (10அடி) 6.2 அடியாகவும், புதுமுறிப்பு குளம் (19 அடி) 14.6 அடியாகவும் உயர்ந்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி கல்மடு குளம், பிரமந்தனாறுகுளம், குடமுருட்டிகுளம், வன்னுரிக்குளம், கனகாம்பிகை குளம் ஆகியன அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இன்று மாலைவரை பாரிய மழைவீழ்ச்சி பதிவாகாத நிலையில் ஏற்கனவே பெய்த மழை நீரின் வருகை குளங்களில் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

நீர் நிலைகள் மற்றும் வான் பாயும் பகுதிகளில் நீராடுதல், சிறுவர்கள் விளையாடுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும், அவ்வாறான பகுதிகள் மற்றும் கழிவு நீர் வெளியேறும் ஆற்றுப்படு்கைகளை அண்மித்துள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்க்கும் வகையில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Latest Offers

loading...