நிசாங்க சேனாதிபதியின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதியின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்திற்கு அருகாமையில் எம்.வீ. அவன்கார்ட் கப்பலில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் என்பனவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நிசாங்க சேனாதிபதியை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியிருந்த நிலையில் நிசாங்க சேனாதிபதி கடந்த ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.