முல்லைத்தீவில் பெய்த கடும் மழையால் 4520 குடும்பங்கள் பாதிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 4520 குடும்பங்களை சேர்ந்த 17,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் வாழும் 4520 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரையான பாதிப்புகளில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 3 வீடுகள் பகுதிகளாக சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.