வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 2 அங்குலமாக உயர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்
125Shares

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 2 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 2 அங்குலமாகவும், முகத்தான்குளம் 8 அடி 7 அங்குலமாகவும், ஈரப்பெரியகுளம் 8 அடி 8 அங்குலமாகவும் மருதமடு குளம் 11 அடி 5 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 8 அடி 6 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

மருதமடு குளத்தில் இன்னும் 5 அங்குல நீர்மட்டம் உயர்வடைந்தால் வான் கதவுகள் திறக்கப்படும். அத்துடன் அருவி ஆறு 3 அங்குலம் பாய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.