சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம்! மீன் விலை அதிகரிப்பு

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடார்த்தி வரும் நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்த்தி வரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ளமை காரணமாக மூலதனத்தை செலவு செய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகின்றது. இது குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுகிறது. இதனால் கரையோர மீன்பிடி முற்றாக பாதிக்கப்படுகின்றது.

மீன் விலை அதிகரிப்பால் நுகர்வோர்கள் பாதிக்கபட்டுள்ளதுடன், கடற்றொழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவர்கள் பல மூலதனங்களை செலவு செய்து, தொழிலுக்கு சென்று வெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.