பரீட்சைக்கு சென்ற மாணவனை தீண்டிய பாம்பு!

Report Print Murali Murali in சமூகம்

சாதாரண தரப் பரீட்சைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவன் ஒருவர் பாம்பு தீண்டியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பதுளை – மஹியங்கனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அறாவ வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு வீட்டிலிருந்து குறுக்கு வழியாக நடந்துசென்றுகொண்டிருந்த 17 வயது மாணவனுக்கே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ரிதீமாலியத்த பிரசேத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் தற்போது மீகஹகிவுல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.