இடமாற்றம் கோரி மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து பேசிய ஆசிரியர்கள்!

Report Print Sumi in சமூகம்

வடக்கில் கஷ்ட பிரதேசங்களில் 6 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆசிரியர்கள் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கஷ்ட பிரதேசங்களில் 6 வருடத்திற்கு அதிகமான சேவைக்காலத்தை நிறைவு செய்ததன் பின்னர், எமது சொந்த இடங்களிற்கு வருவதற்காக இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தோம்.

இடமாற்றம் நிராகரிக்கப்பட்ட விபரக் கோவையில், ஆளணி பற்றாக்குறை இல்லை என காரணம் காட்டி, இடமாற்றத்தை நிராகரித்துள்ளனர்.

அதனடிப்படையில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாகாண கல்விப் பணிப்பாளரை சந்தித்தோம்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியை நிறைவு செய்தால், பின்னர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கின்றனர். ஆவ்வாறு பார்த்தால், நாங்கள் 7 வருடத்தை தாண்டியும் கடமையாற்ற வேண்டியதாக இருக்கும்,

எனவே, வெளிமாவட்டத்தில் கடமையாற்றாத ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ளார்கள். அவர்களை அந்த இடத்திற்கு இடமாற்றத்தை வழங்கிக் கொண்டு, எமக்கான இடமாற்றத்தை தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு அதி கஷ்ட பிரதேசமான, மடு, துணுக்காய், மன்னார், உள்ளிட்ட பல்வேறு வலயங்களைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எமக்கான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Latest Offers