காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் ஆறுமுக நாவலரின் நினைவு தினம் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது.

வவுனியா - பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பினர், தமிழருவி சிவகுமார், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன் நிகழ்வின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.