வவுனியாவில் டெங்கினை கட்டுப்படுத்த வீதிக்கு இறங்கிய கிராம சேவையாளர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியிலிருந்து வவுனியா நகர் வரையிலான வீதிப் பகுதி இன்று மதியம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் வவுனியா பிரதேச செயலகத்தினதும் இணை ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு செயற்றிடம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.