வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா!

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வவுனியா மாவட்ட கலாச்சார பேரவையும், கலாசார அதிகார சபையும் மாவட்டச்செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வவுனியா வவுனியா மாவட்ட பண்பாட்டுப்பெருவிழா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நடனம், கிராமிய கலையளிக்கை, சிங்கள கிராமிய நடனம், மிருதங்க இசை என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்துடன் கலைஞர்களிற்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.