மடு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் பாலம்பிட்டி பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 65க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு தேவையான நுளம்பு வலைகள், பாய்கள் போன்றவற்றை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாக சென்று குறித்த பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.