கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? சுந்தரம் அருமைநாயகம்

Report Print Yathu in சமூகம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 27 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் வெள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 27 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் குளங்களின் நீர் மட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இரணைமடுகுளம், கல்மடுகுளம் ஆகிய குளங்களினுடைய நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு படையினர், பொலிஸார், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், திணைக்களத் தலைவர்கள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers