மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கிரமமான முறையில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டுள்ளது.

வழங்கப்படவிருக்கின்ற உலர் உணவு பொருட்கள் தரமானதாகவும் சிறந்ததாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வதும் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சமைத்த உணவு தரமானதாக அமைவதற்கு கிராம சேவக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் உதயகுமார் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று முதல் 12 இடைத்தங்கள் முகாம்களில் 64 குடும்பங்களை சேர்ந்த 1915 பேர் தற்போது முகாம்களில் தங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளை சார்ந்த 15019 குடும்பங்களிலுள்ள 51433 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.