வீடுகளை கையளிக்க முன்னாள் அமைச்சர்களுக்கு கால அவகாசம்! தவறினால் சட்ட நடவடிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

புதிய அமைச்சர்களுக்குத் தேவையான உத்தியோகபூர்வ வீடு மற்றும் வாகனங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமான வீட்டினை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மாத்திரமே கையளித்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

இதேபோன்று முன்னாள் அமைச்சர்களும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட வீடுகளை கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அளவில் இவை கையளிக்கப்படா விட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சு மற்றும் அலுவலகங்களுக்காக அரச கட்டடங்களை பயன்படுத்துவது தொடர்பிலும் மிகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பாரிய தொகையைச் சேமிக்க முடியும். ஜனாதிபதி செயலகமும், இது தொடர்பான கோரிக்கையை விடுத்திருப்பதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Latest Offers

loading...