தம்பலகாமம் - தாயிப் நகர் வீதி பாலம் உடைந்ததால் போக்குவரத்துக்கு தடை

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை, தாயிப் நகர் - தம்பலகாமம் கோயில் வீதியில் உள்ள பாலம் உடைந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்துத்தடை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் நிலவி வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறித்த வீதி மிகவும் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதுடன் அவ்வீதியில் உள்ள பாலம் ஒன்றும் உடைந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக உடைந்து காணப்படும் இப்பாலத்தை புனரமைக்கவோ தற்காலிகமாக போக்குவரத்துவசதியினை ஏற்படுத்தவோ இது வரையில் யாரும் முன்வரவில்லை எனவும் நாளாந்தம் இவ்வீதியூடாக வைத்தியசாலைக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் என பலரும் இதனால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்பாலத்தை சீர்செய்து உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்ப்படுத்தி தருமாறு உரிய அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...