இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் மூடப்பட்டன

Report Print Suman Suman in சமூகம்

மேலதிக நீரை வெளியேற்றுவதற்க்காக திறக்கப்பட்ட இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வந்த கனமழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்த நிலையில் அதனை வெளியேற்றுவதற்காக குளத்தின் 14 வான்கதவுகளும் கடந்த சனிக்கிழமை திறந்து விடப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் குளத்திற்கு வரும் நீரின் அளவு குறைவடைந்ததால் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தற்பொழுது குளத்தின் நீர்மட்டம் 35.02 அடியில் காணப்படுவதாகவும் கனமழை பெய்தால் மீண்டும் குளத்தின் நீர்மட்டம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest Offers

loading...