கிணற்றுக்குள் வீசப்பட்ட இரண்டரை மாதக் கைக்குழந்தை மரணம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ்ப்பாணம் துன்னாலை குடவத்தை பகுதியில் இரண்டரை மாதக் கைக்குழந்தை ஒன்று கிணற்றுக்குள் வீசப்ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பகுதியின் வீட்டுக் கிணற்றில் இருந்து குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தாயுடன் இரவு தனியே இருந்த பொழுது வீட்டுக்குள் இனந்தெரியாவர்கள் புகுந்ததாகவும் அதன் பின் குழந்தையைக் காணவில்லை என்று தேடிய பொழுது குழந்தை கிணற்றுக்குள் காணப்பட்டதாக தாயார் பொலிசாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

குழந்தையின் மரணம் குறித்து யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சடலம் மந்திகை வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.