தேசத்திற்கு கௌரவம் சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Report Print Varun in சமூகம்

நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெறுமதியான29 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தமாக 152 பதக்கங்களை வெற்றி கொண்டுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தினுடாகவே அவர் இந்த வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

நமது தேசத்தின் கொடியை உயர பறக்க விட்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் நமது தேசத்தின் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...