பாலம் சேதமடைந்துள்ளதால் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் பரந்தன் மக்கள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் உரியமுறையில் அமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியால் பயணிக்கும் 1000இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, பரந்தன் ஏ-9 வீதியில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்து போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.

பரந்தன் ஏ-9 வீதியில் இருந்து மாட்டுப்பட்டி தெரு மயான வீதியினைக் குறுக்கறுத்துச் செல்லும் ஆற்றுக்கான பாலம் பல மில்லியன் ரூபாய் செலவில் கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்ட நிலையில் குறித்த பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக உடைந்துள்ளதுடன் ஏனைய பகுதிகளும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இதனால் பரந்தன், சிவபுரம் மற்றும் கிராமவிஸ்தரிப்பு திட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் போக்குவரத்துகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...