எபடின் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

கினிகத்தேனை எபடின் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உரிழந்தவர் பலங்கொட அக்கரெல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட எம்.ரி. மஹேஸ் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் முடிந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

உயிரிழந்த நபர் கினிகத்தேனை பகுதியில் உள்ள அவரது உறவினர் ஒருவரின் வீடு ஒன்றுக்கு வருகை தந்து நேற்று மாலை மேலும் மூன்று நணபர்களுடன் எபடின் நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற வேளையில் கால் வழுக்கி நீர்வீழச்சியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.