கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Report Print Arivakam in சமூகம்

கரைச்சி பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அனைத்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களால் இம்முறை அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

இருந்தபோதிலும் கட்சியின் தலைமையினாலேயே நாங்கள் எதிர்த்து வாக்களிக்கிறோம் என சில உறுப்பினர்கள் தெரிவித்த அதேவேளை, எவராலும் எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை .

மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கின்ற போதிலும் கட்சிக்காகவே வாக்களிக்கின்றோம் என எதிர்த்து வாக்களித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைக்கப் பெற்று மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

எதிராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் சுயேட்சைக்குழுவினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளே எதிர்த்து வாக்களித்தனர்.

Latest Offers

loading...