ஜனாதிபதியின் பெயரைச் சொல்லி பணம் மோசடி செய்த இருவர் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

பணம் பறிக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபயவுடன் நெருங்கியவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ராஜாங்கனையை சேர்ந்த நிஹால் தஸநாயக்க மற்றும் செவனகலையை சேர்ந்த நுவன் ஜெயக்கொடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆசிரியர் தொழிலை பெற்றுத்தருவதாக கூறி பெண் ஒருவரிடம் 150,000 ரூபாவை கோரியுள்ளனர்.

இதற்காக போலி கடிதம் ஒன்றையும் இவர்கள் அந்த பெண்ணுக்கு வழங்கியுள்ளனர். இந்தநிலையிலேயே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Latest Offers

loading...