ஆறு மணி நேர விசாரணைகளின் பின்னர் வெளியேறினார் சுவிஸ் தூதரக பெண் பணியாளர்!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும், சுவிஸ் தூதரத்தில் பணிப்புரியும் பெண், குறித்த சம்பவம் தொடர்பாக 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த பெண், இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று இரண்டாவது நாள் ஆஜராகினார்.

இந்நிலையில், ஆறு மணி நேர விசாரணைகளின் பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதனிடையே, நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுத் பிரிவில் முன்னிலையாகுமாறு குறித்த பெண்ணை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த பெண் நேற்றைய தினமும் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் கடந்த 25ம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு சில மணிநேர விசாரணையின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முக்கியமான படுகொலைகள், வெள்ளை வான் கடத்தல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உயிரச்சுறுத்தல் காரணமாக சுவிட்ஸர்லாந்து நாட்டிற்குச் தப்பிச்சென்ற பின்னணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த சம்பவம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே, குறித்த பெண் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Latest Offers

loading...