க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர் விபத்தில் பரிதாபமான பலி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சிதம்பரபுரம், வன்னிகோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மாணவரொவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, மோட்டார்சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி வந்தவர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மோட்டார்சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...