நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

Report Print Sujitha Sri in சமூகம்

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சகோதரியின் கணவரை கொலை செய்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பிற்கு எதிராக குற்றவாளி மேன்முறையீடு செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி மா.இளஞ்செழியனால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்து 2014ம் ஆண்டு மாசி மாதம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பிற்கு எதிராக குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியென மீண்டும் உறுதி செய்துள்ளது.

1997ம் ஆண்டு தனது ககோதரியின் கணவரை கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியாக எதிரியின் தந்தையும், அயல் வீட்டுக்காரரும் சாட்சியம் அளித்துள்ளனர்.

மேலும் இந்த தீர்ப்பு உயர் நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...