முல்லைத்தீவில் அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது படுகாயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விபாசரணைகள் மல்லாவி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...