இரும்பு கம்பியால் தாக்கி முன்னாள் இராணுவ வீரரின் காலை உடைத்த அரசியல்வாதி

Report Print Steephen Steephen in சமூகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சுமித் ராஜபக்ச தாக்கியத்தில் காயமடைந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலவ்வை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த பத்மகுமார என்ற முன்னாள் இராணுவ வீரரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் மகனுக்கும் முன்னாள் இராணுவ வீரருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றியுள்ளது. அப்போது அந்த இடத்திற்கு சென்ற சுமித் ராஜபக்ச, முன்னாள் இராணுவ வீரரை தாக்கியுள்ளார்.

தாக்குதல் காரணமாக முன்னாள் இராணுவ வீரரின் ஒரு காலில் 12 இடங்களில் எலும்பு முறிந்துள்ளது. அத்துடன் சுமித் ராஜபக்ச துப்பாக்கி பிரயோகமும் செய்ததாக காயமடைந்த நபர் கூறியுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஆறு பேர் தன்னை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன் இரும்பு கம்பியால் தாக்கியதாக முன்னாள் இராணுவ வீரர் முறைப்பாடு செய்துள்ளார்.