இலங்கையை ஓரக்கண்ணால் பார்க்கும் தமிழ்நாடு !!

Report Print Varun in சமூகம்

தமிழ் நாடு தொடர்ச்சியாக இலங்கையை ஓரக் கண்ணால் பார்த்து வருவதாக முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து அரசியல் ரீதியாக எவரும் தமிழ் நாட்டுக்கு செல்வதும் இல்லை அதேபோல தமிழ் நாட்டில் இருந்தும் எவரும் இங்கு வருவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;

குறிப்பாக தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் 32 கிலோ மீட்டர் காணப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு முதலமைச்சர் கூட இலங்கைக்கு இதுவரை வந்தது கிடையாது.

இங்கிருந்தும் சென்றது கிடையாது. நான் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒருமுறை சென்றேன். அங்கிருந்த ஊடகவியலாளர்கள் என்னையும் வடமத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸவிதாரணவாயும் சூழ்ந்துகொண்டனர்.

நாம் அவர்களுக்கு மிகவும் அன்பாக பதிலளித்தோம். இந்தியாவின் தமிழ் நாட்டை தவிர ஏனைய நாடுகளில் இருந்து பலர் வருகின்றனர்.

ஏன் இவர்கள் மட்டும் எம்மை ஓரக்கண்ணால் பார்க்க வேண்டும்? நான் நினைக்கின்றேன் அன்று நாம் சென்று ஏற்படுத்தி கொண்ட நட்பை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தால் இந்தநிலை மாறி இருக்கலாம்.

புரிந்துணர்வையே நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அன்று தமிழ் நாடு மட்டுமே எமக்கு எதிராக இருந்தது.

ஆனால் இன்று கனடா, சுவிஸ் ,உள்ளிட்ட பல நாடுகள் எமக்கு பாரிய பிரச்சினையாக இருக்கிறது.

யுத்தம் முடிந்த ஒரு நாட்டுக்கு இப்படியான பிரச்சினைகள் வருவது சகஜம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.