புனர்வாழ்வு அளிக்கப்பட்ட கைதிகளை சமூகத்துடன் இணைக்க புதிய திட்டம்

Report Print Kamel Kamel in சமூகம்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட கைதிகளை சமூகத்துடன் மீள இணைப்பது தொடர்பில் புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை சமூகத்துடன் மீள இணைப்பது தொடர்பில் புதிய அணுகுமுறை பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு நிலைமைகளை பார்வையிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.