திருகோணமலையில் சிறுமியொருவர் திடீரென உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருகை தந்த சிறுமி ஒருவரே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி ஏற்கனவே காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எனினும் தொடர்ச்சியாக காய்ச்சல் காணப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போதே அவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த வீ.கிஷோபிதா (13 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.