ஓ.எம்.பி எமக்கு தேவையில்லை! சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வவுனியாவிலிருந்து விடுக்கப்பட்ட செய்தி

Report Print Theesan in சமூகம்

மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் இன்றையதினம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின்போது உயிரிழந்த 145,000 பேரிற்கும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலவந்தமாக காணாமல் போனவர்களின் நீதி மற்றும் பொறுப்பு கூறலிற்காக தமிழர்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.

எனவே தமிழர்களின் அரசியல் விருப்பை கண்டுபிடிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழான வாக்கெடுப்பு தேவை என இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், எங்கள் உறவினர்கள் எங்கே?, இழப்பீட்டு அலுவலகம் எமக்கு தேவையில்லை, ஓ.எம்.பி எமக்கு வேண்டாம் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Latest Offers

loading...