அம்பாறையில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

Report Print Varunan in சமூகம்

அம்பாறை - உஹன பிரதேச செயலாளர் பிரிவில் சமன் பிரிவெனா அருகில் உள்ள பிரதான வீதியில் மின் கம்பம் இடிந்து விழுந்ததால் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள குறித்த காட்டு யானைக்கு சுமார் முப்பது வயது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் உஹன பகுதியில் அண்மைய காலங்களாக யானைகள் இறந்து காணப்படுவதாகவும், குறித்த இடத்திற்கு அடிக்கடி காட்டு யானைகள் வருவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்த காட்டு யானை அதிசக்தி வாய்ந்த மின்கம்பத்துடன் மோதி அதை உடைத்திருந்ததுடன், இதனால் இலங்கை மின்சார சபையினர் அப்பகுதி மின்சார இணைப்புகளை தற்காலிகமாக துண்டித்து இறந்த யானையை மீட்க உதவியுள்ளனர்.

Latest Offers