உறவுகளுக்காக 1008 நாட்களை கடந்தும் முன்னெடுக்கும் போராட்டம்!!!

Report Print Varunan in சமூகம்

உரிமைக்காக தொடர்ந்தும் போராடும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்றையத்தினம் முல்லைத்தீவில் 1008 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி நீதிகோரி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுவரும் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயம் முன்பாக ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று அங்கே ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எங்கே எமது உறவுகள் எங்கே? 1000நாட்களுக்கு மேலாக போராடும் எமக்கு மனித உரிமைகள் தினம் எப்போது ?

சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து , சர்வதேசமே எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுதா புதிதாக பொறுப்பேற்ற அரசே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு பதில் கூறு போன்ற கோஷங்களை எழுப்பியவாறு மாவட்ட செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிப்பதற்கான மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடகிழக்கை சேர்ந்த காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் , சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ,சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...