சுவிஸ் தூதரக அதிகாரி சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு சமூக வலைத்தளங்களில் தாக்குதல்

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு, சமூக வலைத்தளங்கள் மூலம் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபுல் குமாரப்பெரும மற்றும் சுதர்ஷன குணவர்தன ஆகிய சட்டத்தரணிகளுக்கு எதிராகவே இவ்வாறு சமூக வலைத்தளங்கள் மூலம் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் மேற்கொண்டு வருவது சமூக பொறுப்பு என்பதுடன் சட்டத்தரணி என்ற வகையில் தமது கடமை என சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

உபுல் குமாரப்பெரும, மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர் என்பதுடன் கடந்த பொதுத் தேர்தலில் அவரது பெயர் அந்த கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் மனித உரிமை செயற்பட்டாளரான சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, கடந்த அரசாங்கத்தின் அரச செய்திப் பணிப்பாளராக கடமையாற்றியதுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் இருந்த நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.

Latest Offers

loading...