ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

Report Print Mohan Mohan in சமூகம்

புதிய ஜனாதிபதியை சந்தித்து தமது காணிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை கேப்பாப்புலவு மக்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாப்புலவு கிராம சேவை பிரிவில் சூரிபுரம், சீனியாமோட்டை, பிலக்குடியிருப்பு மற்றும் கேப்பாபுலவு ஆகிய கிராமங்களாக 4 கிராமங்கள் உள்ளடக்கப்படுகின்றது.

2009ம் ஆண்டு இறுதி கட்ட யுத்தத்தின் போது குறித்த கிராமம் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட போது, இப்பிரதேசத்தில் வாழ்ந்த பொதுமக்கள் இடம்பெயர்ந்து மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தனர்.

இவ்வாறு இடம் பெயர்ந்திருந்த இக்கிராமத்தை சேர்ந்த 150 குடும்பங்கள் 2013ம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக 2017ம் ஆண்டு மார்கழி மாதம் 29ம் திகதி இராணுவத்தினர் சுவீகரித்திருந்த 133.34 ஏக்கர் காணிகளை 85 குடும்பங்களுக்கு மீள வழங்கியுள்ளனர்.

ஆனாலும் 100 குடும்பங்களுக்கு சொந்தமான 171 ஏக்கர் காணிகளை இராணுவம் இன்னும் தம் வசம் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தமது காணிகளை விடுதலை செய்யும் வரையில் தமது போராட்டத்தை தொடர்வதாக கூறிவரும் பிரதேச மக்கள் புதிய ஜனாதிபதியை சந்தித்து தமது காணிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers