கற்பிட்டியில் மீட்கப்பட்ட 10 கிலோ தங்கம் - நால்வர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கற்பிட்டி கடற்கரையில் நேற்று அதிகாலை 10 கிலோ கிராம் தங்கத்துடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி குடாவ, புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முயன்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 10 கிலோ தங்கமும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி இன்னமும் மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.