போலியான குற்றச்சாட்டை முன்வைத்த சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரின் பணிநீக்கம்?

Report Print Varun in சமூகம்

கொழும்பு சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய ஸ்ரீயாலதா எனப்படும் காணியா பெரிஸ்டார் பிரான்சிஸ் என்னும் பெண் ஊழியரை தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்துவதற்கு சுவிஸ் தூதரகம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தூதரகம் அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பொய்யான குற்றச்சாட்டை இவர் முன்வைத்துள்ளதன் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் சுவிஸ் அரசாங்கத்தின் பணிப்பில் அவரது சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீயாலதா எனப்படும் காணியா பெரிஸ்டார் பிரான்சிஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் இதனால் சுவிஸ் அரசாங்கம் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அதனை சீர்செய்துகொள்ள இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் ஊழியர் மூன்று முறை குற்றவிசாரணை திணைக்களத்திற்கு சென்று 20 மணித்தியாலங்கள் வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தார்.

எவ்வாறாயினும் அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் முரண்பாடுகள் காணப்படுவதாக குற்றவிசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.