காலிமுகத்திடல் நடைபாதையை சூரிய சக்தி பயன்படுத்தி ஒளியூட்ட நடவடிக்கை - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Report Print Gokulan Gokulan in சமூகம்

காலிமுகத்திடலில் இயற்கையான சூழலை ஏற்படுத்தும் பொருட்டு நடைபாதைகளில் சூரிய சக்தியை கொண்டு எரியும் மின்குமிழ்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதிபெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்,

பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை பெருமளவில் செலவிடுவதற்கு காலிமுகத்திடலிற்கு வருகைத்தருகின்றார்கள். இவ்விடத்தில் இரவு பகலாக தங்களுடைய நேரத்தை செலவிட விரும்புகின்றார்கள்.

மாலை வேளையில் இந்நடை பாதையில் குறைவான வெளிச்சம் இருக்கின்றமையால் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளிற்கு முகங்கொடுக்கின்றமையினால் மக்களால் தங்களுடைய ஓய்வு நேரத்தை உரிய முறையில் கழிக்க இயலாதுள்ளது.

இக்காலிமுகத்திடலிலுள்ள நடை பாதைகளில் மின்குமிழ்களை பொருத்தி ஒளியூட்டுவதற்கு சூரிய சக்தியை உபயோகித்து மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மனங்கவர் முறையில் இப்பணியை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது , என்று தெரிவித்துள்ளார்.