வீட்டுத் தோட்டத்திற்கு நுழைந்த பெரிய முதலை

Report Print Steephen Steephen in சமூகம்

திருகோணமலை ஆனந்தகுளம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பெரிய முதலை ஒன்றை உயிருடன் பிடித்து குளத்தில் விட திருகோணமலை வனஜீவராசிகள் திணைக்கள அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த முதலை நேற்று முன்தினம் இரவு ஆனந்தகுளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் காணப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் இணைந்து அதனை பிடித்து வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனந்தகுளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளதால், இரவு நேரத்தில் இந்த முதலை கிராமத்திற்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகள் பிடித்து கொடுத்த முதலையை அதிகாரிகள் வில்கம் வேஹெர பகுதியில் உள்ள கட்டுக்குளத்தில் விட்டுள்ளனர்.

Latest Offers

loading...